திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை(30) காலையில் திருகோணமலையில் அமைந்து கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குடும்ப உறவுகள் ஆர்ப்பாட்மொன்றில் ஈடுபட்டார்கள்.

காணாமல் ஆக்காப்பட்டோர்களின் குடும்ப உறவுகள் படுகொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள் இதில் கலந்து கொண்டார்கள்.

நூறிற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதில் பிரதேச பெண்கள் அமைப்புகள்,மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

Comments