Posted by
கந்தளாய் பேராற்று வெளி நியூஸ்
வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனை செய்தவர் ஏறாவூர் பொலிஸாரிடம் பிடிபட்டார்..

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 30 வயதான குடும்பஸ்தர் ஒருவரை நேற்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த இந்த நபர் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை பிரதான வீதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 5300 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமையவே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment