சுதந்திரக்கட்சியின் மாநாட்டுக்கு மகிந்தவுக்கும் அழைப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65 வது ஆண்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி குருணாகல் நகரில் நடைபெறவுள்ளது.
சகல பிளவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்க முடியுமே அன்றி கட்சியையோ கட்சியின் தலைமையையோ விமர்சிக்க முடியாது எனவும் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். (tw)

Comments
Post a Comment