லிப்டன் சுற்றுவட்டத்தை மௌலானா சுற்றுவட்டமாக பெயர் மாற்றுங்கள் – மஹிந்த கோரிக்கை
லிப்டன் சுற்றுவட்டத்தை மௌலானா சுற்றுவட்டமாக மாற்றுவது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று அலவி மௌலானாவின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எந்த ஒரு அரசாங்கத்திற்கு கீழும் தொழிலாளர்களுக்காக லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கபடும் ஆர்ப்பாட்டங்களில் அலவி மௌலானா கலந்துக்கொண்டுள்ளார்.
அலவி மௌலானா ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்படும் முக்கிய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட இவருக்காக, லிப்டன் சுற்றுவட்டத்தின் பெயரை மாற்றுவதில் தவறில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்

Comments
Post a Comment