உலகிற்கு போராட்டத்தையும் விடா முயற்சியையும் கற்று கொடுத்த எதியோப்பிய நாட்டு வீராங்கனை
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ஒத்த ஷூவுடன் மொத்த தூரத்தையும் ஓடி முடித்து அசத்திய எத்தியோப்பியா வீராங்கனை!
ஒலிம்பிக் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் ஒரு வித்தியாசமான காட்சியை ரசிகர்கள் காண நேரிட்டது. சனிக்கிழமை நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் எத்தியோப்பியாவின் எடனேஷ் டிரோ, ஒரு ஷூவுடன் போட்டியின் பாதி தூரத்தை கடந்தது அனைவரையும் அசர வைத்து விட்டது. விட்டு விடக் கூடாது என்ற வெறியுடன் அவர் ஒற்றை ஷூவுடன் ஓடி போட்டி தூரத்தை கடந்த விதம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
இந்தப் போட்டியில் பங்கேற்றபோது இரு வீராங்கனைகளுடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவரது ஷூ அறுந்து போனது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் டிரோ. இருப்பினும் அவர் அடுத்து செய்ததுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஒரு ஷூவை மட்டும் போட்டபடி அவர் மீதத் தூரத்தையும் ஓடிக் கடந்து அனைவரையும் அசரடித்து விட்டார். வழக்கமாக அவர் ஓடும் நேரத்தை விட 20 விநாடி குறைவாக ஓடி போட்டி தூரத்தை முடித்தார். இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்


Comments
Post a Comment