மஹிந்தவினால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது : யாப்பா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் விரைவில் தீர்த்துவிடுவோம். அவ்வாறு தீர்க்க முடியாவிடின் என்ன செய்வது என்பதை அப்போது கூறுவோம் என்று சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
பாதயாத்திரை மேற்கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இதுவரை சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இல்லாத விடயத்தை என்னால் கூற முடியாது. இந்த பாதயாத்திரை குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தை ஐந்து வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது. அரசாங்கத்தை கவிழ்ப்போம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.


Comments
Post a Comment