பேராதனை பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்!
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது இன முரண்பாடல்ல, மாணவர் சங்கம் தமது மாணவர் செயற்பாட்டிற்கு உண்டியல் மூலம் நிதி சேகரிப்பதற்காக தமிழ் மாணவர்களை அழைத்த போது தமிழ் மாணவர்கள் உண்டியல் குலுக்கி நிதி சேர்க்க மறுத்தமையே காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் சுழற்சி முறையான மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் மாணவர்கள் மறுத்தமை மற்றும் மாணவர்கள் போராட்ட சுவரொட்டி ஒட்டுவதற்காக தமிழ் மாணவர்களை அழைத்தமைக்கு அதில் பங்குபற்ற மறுத்தமை ஆகிய விவகாரங்களே இந்த மாணவர்களிடையே தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment