அரசாங்கத்தின் பிரதேச அபிவிருத்தியும் திருகோணமலை பிரதேச செயலக கண்துடைப்பும்
இந்த நல்லாட்சி அரசில் ஊழல்கள் அற்ற பிரதேச அபிவிருத்திகள் குருடன் கண்ட கனவாக நீள்கிறது. திருகோணமலை நகர் பிரதேச செயலகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகமான அபிவிருத்தி வேலைகள் திறந்த விலைமனுக் கோறல் என்ற கோசத்துடன் அதிகாரிகளுக்கு நெருக்கமான மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்படுவதுடன் சில நன்றிக்கடனாகவும் வழங்கப்படுகின்றது.
சில அபிவிருத்தி வேலைகளுக்கு விலைமனுக்கள் கோரப்படாமல், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடாமல் கொந்தராத்துக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான வேலைகள் பல கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு என்ன வேலைகள் எவ்வளவு மதிப்பீடு, யார் கொந்தராத்துக்காரர் என்பன தெறியாமல் பல மில்லியனுக்கான வேலை நடைபெற்று வருகிறது.
இதற்கு தொழில் நுட்ப உத்தியோகத்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சில உத்தியோகத்தர்கள் தமது சலுகைகளை பெறுவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
மேலும் இவ்வாறு கொந்தராத்து வேலைகள் முறைமைக்கு புறம்பாக வழங்குவதற்கு காரணம் தற்போது பிரதேச செயலகம் உற்பத்தி திறன் தேசிய போட்டியில் பங்குபற்றுவதற்காக அலுவலகத்தை அழகு படுத்த மேற்படி கொந்தராத்துக்காரர்களிடம் பணம், பொருள் உதவிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அவர்களுக்கே வழங்குவதாக கூறியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் நல்லாட்சி என்பது புதிய போத்தலில் பழைய தண்ணீர் இருப்பதற்கு சமமானது. மக்களின் கனவுகள், ஏதிர்பார்புக்கள் மற்றும் தியாகங்கள் என்பன பொய்யாகிவிடும்

Comments
Post a Comment