கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

கிண்ணியா பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் கிண்ணியா பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில்  திங்கட்கிழமை 29 .08.2016 மாலை 2.30 மணியளவில் இணை அபிவிருத்திக் குழுத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஜிப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது .

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறுப் மாகாண சபை உறுப்பினர் நஜிப் அப்துல் மஜித் ,மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்,கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் திட்டமில் பணிப்பாளர் முஜிப் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் உயரதிகாரிகள் உத்தியோகத்தர் ஏனை சங்க உறுப்பினர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்

இதன் போது நகரசபை அபிவிருத்தி செயற்பாடுகள் , பிரதேச சபை அபிவிருத்தி செயற்பாடுகள் , கிண்ணியா வலய அபிவிருத்தி செயற்பாடுகள் விவசாயிகளின் பிரச்சினை, பால் பண்ணையாளர் பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.



Comments