அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்
அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து கழகங்களுக்கிடையிலான மர்ஹூம் அலி உதுமான் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப வைபவம் இன்று மாலை 4 மணிக்கு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அக்கரைப்பற்று உதைந்தாட்ட லீக்கின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதிபதி என்.எம்.அப்துல்லா கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இன்று இடம்பெறவுள்ள ஆரம்ப போட்டியில் அக்கரைப்பற்று ஏஸ் விளையாட்டுக் கழகமும், அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகமும் விளையாடவுள்ளது.
அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறவுள்ள முதலாவது சுற்றுப்போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து சமூகத்திற்கு பல்வேறு பணிகளை ஆற்றிய மர்ஹூம் அலி உதுமான் அவர்களின் ஞாபகார்த்மாக இச்சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Comments
Post a Comment