ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி பலி!

ஹபாரதுவ பிரதேசத்தில் உள்ள கொக்கல கடலிற்கு நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நீரிழ் மூழ்கிய நிலையில் கரையில் ஒதுங்கி சுவாசிக்க கடினப்பட்டுக் கொண்டு இருந்தார் எனவும், பின்னர்,கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து 61 வயதுடைய ரஷ்ய பிரஜைஉயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலத்தின் பிரேத பரிசோதனைகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

Comments