கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என விளம்பரங்கள் வந்தால் அவதானம்.

கட்டார் நாட்டில்  வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக இணைத்தளங்களில் பிரசுரமாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம்  இதனைத் தெரிவரித்துள்ளது.

கடாருக்கு பணிப் பெண்களை இணைத்துக் கொள்வதாக இணையத்தளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

பெரும்பாலான இவ்வாறான விளம்பரங்கள் மோசடியானவையாகவே காணப்படுகின்றன.

எனவே இவ்வாறான விளம்பரங்களை கடார் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்திக் கொண்டு, வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Comments