புதிய கட்சி ஆரம்பிக்கும் சு.க உள்ளுராட்சி பிரதிநிதிகள்!
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் உறுப்பினர்கள் குழுவொன்று புதிய கட்சியை அமைப்பதற்கு யோசனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் நேற்று கொழும்பில் கூடி இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
ஆனால் இன்னும் கட்சியின் பெயர் , சின்னம் தொடர்பாக தீர்மானிக்கவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கீழ் தம்மால் தேர்தல்களில் போட்டியிட முடியாது எனவும் இதனால் புதிய கட்சியை அமைத்து அதில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பினால் அதன் தலைமைத்துவத்தை அவருக்கு வழங்க தயார் எனவும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment