ரயிலில் மோதுண்டு நபரெருவர் பலி!

மொரட்டுவை – மோதர பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு நபரெருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானையிலிருந்து அலுத்கம சென்ற ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்  60 இலிருந்து  70 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் வெள்ளை மற்றும் நீல நிறத்திலான சாரம் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments