பதவி விலகினார் பந்துல குணவர்த்தன
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி நீக்கியதுடன் புதியவர்களை நியமித்தார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் டளஸ் அழகப்பெரும, அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வது ஆண்டு விழா மாநாட்டுக்கு பின்னர், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலர் அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், விலக்கப்படுவதற்கு முன்னதாக பந்துல குணவர்தனவும் டளஸ் அழகப்பெருமவும் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Comments
Post a Comment