ஞானசார தேரரின் உரைக்கு எதிராக பொரல்லையைச் சேர்ந்தவர் பொலிஸில் முறைப்பாடு

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தேஞானசார தேரர் கடந்த ஜூன் 8 ஆம் திகதி மேற்கொண்ட உரைக்கு எதிராக பொரல்லையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டை விசாரணை  செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டை மேற்கொண்டவர் தேரரின் உரையின் சீ.டி. தட்டு ஒன்றையும், இணையத்தள முகவரியையும் பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. D C

Comments