இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முற்பட்ட இருவர் கைது!

இலங்கைக்கு ஒரு கிலோகிராம் பெறுமதியான போதை பொருளை கடத்த முற்பட்டதாக கூறப்படும், இரண்டு பொறியியல் துறை மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட பொலிஸாரால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இரண்டு மாணவர்களில் ஒருவரின் தந்தையே இந்த போதை பொருளை கொண்டுவந்துள்ளார் என்றும், அவற்றை கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லுமாறு மாணவர்கள் இருவருக்கும் பணித்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த போதைப் பொருளை வழங்கியதாக கூறப்படும் மீனவரான சேகர் என்பவர் சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளார்.

பிரதான சந்தேகநபரான இவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த போதை பொருள் மாதிரி ஆய்வுக் கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments