அரச ஊழியர்கள் இடமாற்றங்களினால் பந்தாடப்பட்டனர் – அப்துல்லா மகரூப்
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் வாதிகளான எம்.ஈ.எச்.மகரூப், ஏ.எல்.அப்துல் மஜீத், எம்.ஈ.எச்.அலி போன்றோரின் காலத்தில் கட்சி முரண்பாடுகள் காரணமாக அரச ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பந்தாடப்படுகின்ற நிலை இருந்தது.அதனை நான் 2000 ஆம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு மாற்றி அமைத்தவன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் தெரிவித்தார்.
மூதூர் எம்.ஏ.பரீத் எழுதிய நிகழ்வும் நெறியும் கவிதை நூல் வெளியீட்டு விழா மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற போது இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் நான் இந்த கவிதை நூலை மேலோட்டமாக பார்த்தேன் .அதில் வேட்பாளர்களும் வாக்காளர்களும் எனும் தலைப்பில் கவிதை ஒன்று இருந்தது.அதில் வேட்பாளர்கள் சொல்கின்ற வாக்குறுதிகளும், வேட்பாளர்களுக்கிடையில் ஏற்படுகின்ற கருத்து மோதல்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.அந்த விடயத்தில் நான் உடன்படுகின்றேன்.ஆனால் இந்த முறை நடைபெற்ற தேர்தலிலே இதனை நான் மாற்றியமைத்தவன் அதனால்தான் திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான வாக்குகளை என்னால் பெற முடிந்தது.
இந்த முறை இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த வேட்பாளரையும் கட்சியையும் ஏசிபேசி நான் பிரச்சாரம் செய்யவில்லை. தூசித்து பேசுகின்ற பேச்சாளர்களையும் மேடையில் ஏற்றவும் இல்லை எனவும் தெரிவித்தார்.


Comments
Post a Comment