அவுஸ்திரேலிய நீதிமன்றில் ஜனாதிபதி குற்றவாளியாக்கப்படுவாரா?
2009ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாவெலி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் உலக வங்கி திட்டத்திற்காக அவுஸ்திரேலிய நிறுவனம் இரண்டில் இருந்து இலஞ்சம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டின் பெடரல் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் அடங்கிய நீண்ட அறிக்கை ஒன்றை அவுஸ்திரேலியாவின் பிரதான இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் பிரதான வானொலி ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை இந்த நாட்டு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெடரல் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் இறுதியில் ஜனாதிபதி அந்நாட்டின் நீதிமன்றத்தால் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்ட முதலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாகும் என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


Comments
Post a Comment