தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் முதலாவது வருட பூர்த்தி மாத்தறையில்!

தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் முதலாவது வருட பூர்த்தியை மாத்தறையில் கொண்டாட உள்ளதாக இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சிகளிலும் உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் அண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலை தொடர்ந்து இந்த தேசிய ஐக்கிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments