இலங்கை தாதியர் சங்கத்தின் ஒரு கோரிக்கை!!

செவிலியர்களின் ஓய்வூதிய வயதை 60 வயதில் இருந்து 63 வயது வரை அதிகரிக்குமாறு அனைத்து இலங்கை தாதியர் சங்கம் சுகாதார அமைச்சிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஊடக பிரிவிற்கு இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர்  காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

செவிலியர்களில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு இடம்பெறாததினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments