முகம்மத் முஸம்மில் மீண்டும் களத்தில்.. ( உரை இணைப்பு

இந்த அரசு நாட்டை காட்டிக்கொடுத்து விட்டது, இதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அநுரகுமார திஸாநாயக்க உடந்தையாக உள்ளனர் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முகம்மத் முஸம்மில் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இதனைக் கூறினார்.

மேலும், காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இதை கணக்கில் கொள்ளாமல் அரசாங்கம் அவசரமாக குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் நிறைவேற்றியது.

எமது இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிற்கவைப்பதற்கான ஒரு சதித்திட்டம் என்றும் முஸம்மில் கூறினார்.

காணாமல் போனோர் சட்டமூலத்தை தமக்கு ஏற்ப அரசு மாற்றியமைத்துள்ளதாகவும் இவர் குற்றம் சுமத்தினார்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சி முறையையே இந்த அரசும் கடைபிடிக்கின்றது. நாமலின் கைதை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.

இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான ஒரு கைது, விசாரணைகளுக்காக அழைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் நாமலை கைது செய்துள்ளனர் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார்.

Comments