தொழிலாளிகளின் சம்பளத்தை தாமதிக்காமல் கொடுத்து விடுங்கள் – சவுதி முப்தி.

தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகளின் சம்பளத்தை தாமதிக்காமல் கொடுத்து விடுங்கள் அவர்களது சம்பளம் தாமதிக்கப்படும் போது அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றார்கள், அவர்களது திறன் குறைந்து விடுகின்றது, அவர்களது குடும்பத்தார் பாதிக்கப்படுகின்றார்கள் என சவுதி அரேபியாவின் பிரபல மார்க்க அறிஞசர் (அஷ்ஷெக் அப்துல் அஸீஸ் அல்-ஷெக் (Grand Mufti Sheikh Abdul Aziz Al-Asheikh) தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றுக்கு அளித்த நேர்கானலின் போதே அஷ்ஷெக் அப்துல் அஸீஸ் அல்-ஷெக் அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்கள்

“தொழிலாளியின் சம்பளத்தை அவர்களது வியர்வை வற்றுவதற்கு முன்னர் கொடுத்து விடுங்கள்“

என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஹதீஸ்சையும் முப்தி அஷ்ஷெக் அப்துல் அஸீஸ் அல்-ஷெக் சுட்டிக்காட்டினார்கள்.

சவுதி அரேபியாவில் அண்மைக்காலமாக சில கொம்பனிகள் தொழிலாளிகளின் சம்பளத்தை வழங்காது தாமதித்ததும், ஊழியர்கள் கொம்பனிகளின் வாகணங்களை தீயிட்டுக் கொழுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அரப் நிவுஸ்.

Comments