ஜனாதிபதியின் இணையதளம் மீது தாக்குதல் குறித்து விசாரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில மணித்தியாலங்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளம் ஹெக் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக ஹெக் செய்யப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கணனி அவசர பிரிவும் விசாரணைகளை ஆரம்பத்துள்ளன.

பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தற்காலிக அடிப்படையில் இணைய தளம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தது எனினும் தற்போது இணைய தளம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments