நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்திக்கு பான் கீ மூன் வாழ்த்து
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் இந்த மாற்றம் நீண்டகால சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் சுபிட்சமான எதிர்காலத்திற்கு உதவியாக அமையும் என்றும் ஐநா செயலாளர் நாயகத்தின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் காணப்பட்ட நெருக்கடிகளை சீரமைத்துக் கொள்வதற்கு புதிய ஆட்சியின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.


Comments
Post a Comment