மூதூர் பிரதேசத்தில் பிள்ளைகளுக்கு தாபரிப்பு பணத்தினை செலுத்தாத நபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளுக்கு 23,000ம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாத நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று சனிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர், மூதூரைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் 4600 ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில் ஐந்து மாதங்களாக தாபரிப்பு செலுத்தாது இருந்த நிலையிலே மனைவி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுது வெள்ளிக்கிழமை(19) மாலையில் கைது செய்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபருக்கெதிராக ஏற்கனவே இரண்டு வழக்குகள் மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை(20) பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments