இயற்கை வழிகளில் கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிப்பது எப்படி?
ஆண், பெண் இருவர் மத்தியிலும் கருவளம் சார்ந்த குறைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணங்கள் பற்பல. எப்படி எளிதாக கருத்தரிப்பது என பார்க்கலாம்…..
இயற்கை வழி -01
உங்களது உடல் எடையை சரி பார்க்க வேண்டும். உடல் பருமன் நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம். உங்கள் பி.எம்.ஐ அளவை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கை வழி -02
காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இயற்கை வழி -03
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இயற்கை வழி -4
மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வாருங்கள். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இயற்கை வழி-05
மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆண், பெண் இருவர் மத்தியிலும் இந்த மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
இயற்கை வழி -06
ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்துங்கள். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து. நட்ஸ், தானியங்கள், பழங்கள், நெய் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இயற்கை வழி-07


Comments
Post a Comment