திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மாநாடு நாளை
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதியை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை மாநாடு ஒன்றினை திருகோணமலை நகராட்சி மன்றத்தில் நடாத்தவுள்ளதாக சங்கத்தின் தலைவி என்.ஆஸா தெரிவித்தார்.
இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களைப்பெற விரும்பினால் 075-2361347 அல்லது 0777405302 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment