ஞானசாரவுக்கு எப்படி தெரியும் ஐ.எஸ். இலங்கையில் ஊடுருவினார்கள் என்று? சற்று சிந்தியுங்கள்

வெளிநா­டு­க­ளி­லி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத முக­வர்கள் கொழும்பு, வில்­பத்து, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு ஊடு­ரு­வி­யி­ருப்­ப­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன என தெரி­விக்கும் பொது­பல சேனா அமைப்பு, அர­சாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக பொது­பல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த வித்­தா­னகே மேலும் குறிப்­பி­டு­கையில்,

சிரி­யாவில் உயி­ரி­ழந்த இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திக்கு இவ் இயக்கம் நஷ்­ட­ஈடு வழங்­கி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

அத்­துடன் பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், மாலை­தீவு, இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்­க­ர­வாத முக­வர்கள் இலங்­கைக்குள் ஊடு­ரு­வி­யி­ருப்­ப­தா­கவும் இவர்கள் கொழும்பு, வில்­பத்து, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் இவர்­க­ளுக்கு அடை­யாள அட்டை பெற்றுக் கொடு­த்­துள்­ள­தா­கவும் டிலான்த குறிப்பிட்டார்.

இந்த ஊடுருவல் விடயத்தை இவர்களுக்கு யார் சொன்னது? இவர்கள் புலனாய்வு கம்பனியா? அரச புலனாய்வு பிரிவா? அல்லது வேறு நாடுகளின் புலனாய்வு ஏஜென்ட்களா? ஒன்றும் இல்லாத பொழுது இவர்கள் வெளியிடும் தகவல்கள் குறித்து அல்லது இவர்களின் கருத்துக்கள் குறித்து பொலிசார் விசாரணை செய்வதில்லையா நல்லாட்சி அரசு ஏன் இவர்களை கண்டு கொள்ள மறுக்கிறது.

குறித்த தகவல்களை அரச புலனாய்வு பிரிவுகளே மறுக்கின்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் ஊர்ஜிதப்படுத்துவது எவ்வாறு என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் எதிர்கால இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை குறித்து சிந்திக்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ் தீவிரவாதிகளாகவும், அல்லது ஆயுதக் கும்பல்களாகவும் சித்தரிக்க முயற்சிக்கும் இனவெறிக்கும்பல்களுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி இல்லையேல் இது பெரிய விடயமாக உருவெடுத்து எமது சமூகத்தை சீரழிக்கும்.

Comments