.திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அரைக்கு புதிய குளிரூட்டிப்பெட்டிகள்
திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் புதிய குளிரூட்டிப்பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சட்டவைத்தியரின் அறிக்கைக்காக உற்படுத்துகின்ற ஓரிரு சடலங்கள் மாத்திரமே குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைப்பதாகவும் மற்றைய சடலங்கள் பிரேத அறையில் வெளியில் வைக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி புதிய 08 குளிரூட்டிப்பெட்டிகள் பொறுத்தப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
தூர இடங்களிலிருந்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகின்ற சடலங்களையும், வௌி நாட்டவர்களுக்கு மரணங்கள் நிலவுகின்ற போது வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல தேவையில்லாத விதத்தில் பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மருந்து களஞ்சியசாலைகளில் மருந்துகளை சரியான வெப்பநிலைக்கு வைத்துக்கொள்ளும் நோக்கில் வைத்தியசாலைகளில் அனைத்து களஞ்சியசாலைகளும் குளிரூட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Comments
Post a Comment