கட்டாரில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த இருவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்தை கொடுத்து கொள்ளை
-அபிவரன்-
கட்டார் நாட்டில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தற்கு வந்து திருகோணமலை கிண்ணியாவில் உள்ள தமது வீடு செல்வதற்காக விமான நிலைய வெளிவீதியில்; வாடகைக்கு அமர்திய வானுக்கு காத்திருந்த இருவருக்கு வாடகை வான் கொள்ளையர்கள்; குளிர்பானத்தில் மயக்கமருந்தை கொடுத்து அவர்களின ;பெட்டிகள் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கட்டுநாயக்கா பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த இருவர் கட்டார் நாட்டில் இருந்து சம்பவதினமான வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் தாம் கொண்டுவந்த பெட்டிகளுடன்; விமான நிலைய வெளிப்பகுதிக்கு வந்தடைந்தனர். இதன்போது தமது வீட்டிற்கு செல்வதற்கு காத்திருந்தபோது அங்கு வந்த இருவர் வாடகைக்கு வான் இருப்பதாகவும் குறைந்த பணம் பெறுவதாக தெரிவித்து இருவரையும் விமான நிலைய வெளிவீதிக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.
இவர்கள் விமான நிலை பாதுகாப்பு சோதனை சாவடியை கடந்து வெளிவீதிக்கு சென்றனர் இதன்போது; அங்கு பயணிகள் இருப்பதற்காக இருக்கும் கதிரையில் இருக்குமாறு தெரிவித்து குளிர்பானத்தை குடிக்குமாறு இருவருக்கும் வழங்கியுள்ளனர் இதனையடுத்து இவர்கள் குளிர்பானத்தை அருந்தியது சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர். இதன்போது இவர்கள் கொண்டுவந்த பெட்டிகள்; மற்றும் பணம் தங்க ஆபரணங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்
இந்த நிலையில் நீண்டநேரமாக மயக்கத்தில் இருவர் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து கட்டுநாயக்கா பொலிசார் அவர்களை மயக்க நிலையில் மீட்டனர் இதன் பின்னர் இவர்கள் சுயநினைவுக்கு வந்த நிலையில் தமக்கு நேர்ந்த கதியை தெரிவித்துள்ளனர்.
இவ் கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்;கா பொ

Comments
Post a Comment