மூதூர் வெளியேற்றப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் – லாகிர்
மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்ட பத்தாண்டு ஈரநினைவுகள் எனும் தலைப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கௌரவ ஜே.எம்.லாஹிர் அவர்களின் தலைமையில் இன்று(௦2) காலை – திருகோணமலை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகிர் உரையாற்றுகையில் 02.08.2006 அன்று மூதூர் தோப்பூர் பகுதிகளில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இற்றைக்கு 10 ஆண்டுகள் ஆகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மூதூர் தோப்பூர் பகுதிகளை நள்ளிரவோடு கைப்பற்றியதோடு பலமான பல பிரங்கி தாக்குதல்களையும் நடத்தினர்
இதனால் மறுநாள் காலை மூதூரின் பல பிரதேசங்களில் ஜனாஸாக்கள் கிடந்ததோடு மூதூரை விட்டு வெளியேறுமாறும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிவித்ததை அடுத்து மக்கள் எட்டாம் மாதம் ௦2 திகதி ஜும்மா தொழுகையும் தொழாமல் மூதூர் ,தோப்பூர் பிரதேசாங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றினர்.
வெளியேறுவதற்கு கினாந்தி முனை ஊடாகவே செல்ல வேண்டும் என்று நிர்ப்பந்தித்தோடு அப்பகுதியில் வைத்து கடுமையான மல்டி பெறல் தாக்குதலில் 54 முஸ்லீம் சகோதரர்கள் உயிர் இழந்தார்கள். இத்தாக்குதலில் உயிர் இழந்த சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும், இன்றைய தினத்தை அவர்களுக்கான தினமாக மக்கள் நினைவு கூருமாறும்,மிகவும் பணிவாக வேண்டுகின்றேன்.


Comments
Post a Comment