மதுபோதையில் பஸ்சை செலுத்திய சாரதி கைது!
மதுபோதையில் வாகனம் செலுத்திய தனியார் பஸ் சாரதி ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புறக்கோட்டையில் இருந்து ஹோமாகம நோக்கி பயணிக்கும் பஸ் வண்டியொன்று (138) இன்று காலை லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் மற்றைய வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயணித்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைள கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகனப் பிரிவு அதிகாரிகளால் குறித்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்ட போது, அதன் சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, பஸ் சாரதியைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பின்னர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் 7500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குறித்த சாரதியின் அனுமதிப் பத்திரம் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை தண்டிக்கப்பட்டவர் அங்கோடை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

Comments
Post a Comment