உயர்தரப் பரீட்சார்த்திகள் இவருவர் மீது கத்திக்குத்து...

க.பொ.த. உயர்தர அகுரஸ்ஸ பரீட்சை மத்திய நிலையத்துக்கு அருகில் உயர்தர பரீட்சார்த்திகள் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அகுரஸ்ஸ பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இந்த சம்பவத்துக்குக் தூண்டல் காரணியாக அமைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Comments