அமெரிக்க மக்களின் நிதி உதவியில் சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலத்திற்கு கட்டட தொகுதி
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களினதும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் அவர்களினதும் அயராத முயற்சியினால் சாய்ந்தமருது கமு/எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமெரிக்க மக்களின் 590,000 அமெரிக்க டொலர் நிதி உதவியிலிருந்து இப்பாடசாலக்கான 12 வகுப்பறைகளைக் கொண்ட சகல வசதிகளையும் கொண்ட கட்டத்தொகுதிக்கான அடிக்கல் நடும் விழா இம்மாதம் 16ம் திகதி செவ்வாய்கிழமை காலை 09 மணிக்கு பாடசாலையின் அதிபர். ஏ.எல். அப்துல் நாபித் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அமைச்சர்கள், பாராளுமன்ற, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், மற்றும் வலய, கோட்ட பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக இன்று காலை சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.


Comments
Post a Comment