பான் கீ மூனின் விஜயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்!

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான விஜயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை பான் கீ மூன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை  தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது,

என்னுடைய ஆட்சிக்காலத்திலும் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோதிலும், பான் கீ மூன் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு நான் அடிபணியாததால், நாடு நெருக்கடிகளை எதிர்நோக்கவில்லை.

ஆனால், தற்போதைய நிலை அவ்வாறு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments