ஜனாதிபதி, பிரதமருக்கு வரியின்றி வாகனங்கள்!

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வரியின்றி இரண்டு வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை மற்றும் பாராளுமனறம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,

எட்டாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அணைத்து பாராளுமனர் உறுப்பினர்களுக்கும் வரியின்றி வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப்பத்திரத்தை ஒழுங்குபடுத்தபடவுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கு வாழ்நாளில் அவ்வாறான வாகன அனுமதிப்பத்திரங்கள் இரண்டு வழங்கப்படும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்

Comments