இரண்டு மாணவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காத ஆசிரியர்...

எழுத்துக்களை எழுதுவதற்கு கடினமான நிலையில் இருந்த இரண்டு மாணவர்கள், வகுப்பு பொறுப்பாசிரியரின் ஆலோசனைப்படி 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றாமல் இருந்த சம்பவமொன்று வெல்லவாய கல்வி வலயத்திற்கு சொந்தமான ரந்தெனிவல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

அந்த மாணவர்களின் பெற்றோர்கள் எமது செய்தி பிரிவுக்கு இது தொடர்பில் தெரிவிக்கையில், தமது பிள்ளைகளுக்கு எழுத்துகளை எழுத முடியாமை காரணமாக புலமை பரிசில் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டாம் என வகுப்பு பொறுப்பாசிரியர் அறிவித்ததாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக எமது செய்தி பிரிவு, பரீட்சைகள் ஆணையாளரிடம் வினவியது.

5 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் புலமை பரிசில் பரீட்சையில் கலந்து கொள்ள வேண்டும் என அதிபர்களுக்கு அறிவுறுத்திவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது கட்டாயமான நடவடிக்கை என கருத்தில் கொண்டு அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நடைபெறவில்லையாயின் அது சட்டத்துக்கு முரணானது என பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments