ராபா கல்வி வளாகத்தின் தாய்த் தமிழ் அரங்கு விழா கெக்கிராவையில்

மானுடச் செழுமைக்கு தமிழ் மொழியால் ஆற்றும் பங்களிப்பிலேயே தமிழின் அடர்த்தியும் வளர்ச்சியும் எனும் கருப்பொருளில் இன்று(28) கெக்கிராவை அரலிய விடுதியில் இடம் பெற்றது இதன் போது ஆங்கில சான்றிதழ் கற்கை நெறியை புர்த்தி செய்த 55 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது

இவ் விழாவில் பிரதான பேச்சாளர்களாக இந்தியா மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.சங்கரேஸ்வரி திருகோணமலை மட்டக்களப்பு வெடி பொருட்கள் கட்டுப்பாட்டு உதவியாளர் எம்.எஸ்.எம் இக்ரிமா மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு மொழியியல் துறை விரிவுரையாளர் எம்.டி.ஹபிபுள்ளா இலங்கை திறந்த பல்கலைக்கழக மற்றும் தேசிய கல்வி நிறுவக வருகை தரு விரிவுரையாளர் ஆர் .சதாத் போன்றோர்கள் தமிழ் மொழியல் தொடர்பான பேச்சுக்களை வழங்கியதுடன் ராபா கல்வி வளாக நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர்.எப்.அரூஸ் அவர்களும் சிறப்பு பேச்சினை நிகழ்த்தினார்
இதன் போது சிறப்பு பேச்சாளர்கள் பொன்னாடை போத்தி கெளரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.


Comments