மொஹம்மட் முஸம்மில் பிணையில் விடுதலை செய்யப்பட்டது ஏன்? காரணம் இதுதான்
(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தி அரச சொத்துக்களுக்கு 71 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து வந்த தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கொழும்பு – - கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
முஸம்மிலின் 6 வயது பிள்ளையின் மனநிலையில், தந்தை அருகில் இல்லாததால் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், முஸம்மில் தொடர்ந்து பிள்ளையை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையில் அப்பாதிப்பானது அதிகரிக்கும் எனவும் வைத்திய அறிக்கைகள் ஊடாக மன்றுக்கு தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து, அதனை விஷேட காரணமாக கருதியே நீதிவான் லங்கா ஜயரத்ன பிணை வழங்க தீர்மானித்தார்.
நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் சிறை அதிகாரிகள் ஊடாக மன்றில் ஆஜர்செய்யப்பட்டார். அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கபில கமகே மன்றில் ஆஜராகியிருந்ததுடன், ஜனாதிபதி செயலக வாகனங்களை மோசடி செய்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
வழக்கு விசாரணை ஆரம்பமான போது நீதிவான் லங்கா ஜயரத்ன, கடந்த தவணை சந்தேக நபர் தரப்பால் முன்வைக்கப்பட்ட 2 ஆவது எழுத்து மூல பிணைக் கோரிக்கை மீதான தீர்ப்பை அறிவித்தார்.
'இன்று இந்த வழக்கு பிணைக் கோரிக்கை மீதான தீர்ப்பை அறிவிக்க எடுத்துக்கொள்ளப்படுகின்றது. கடந்த தவணை சந்தேக நபர் சார்பில் எழுத்துமூலம் முன்வைக்கப்பட்ட பிணைக்கோரிக்கை தொடர்பில் இந்த மன்று அவதானம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழும் மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) ஆம் அத்தியாயத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 100,386,389,400 ஆகிய பிரிவுகளின் கீழும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும் சந்தேக நபருக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 17 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அச்சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு பிணை வழங்க முடியாது. எனினும் பிணை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்துக்கு அமைய அத்தகைய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விஷேட காரணிகளை கருத்தில் கொண்டு பிணை வழங்க முடியும்.
இந் நிலையில் சந்தேக நபரின் சட்டத்தரணியால் பிணைக் கோரிக்கையை வலுப்படுத்த பல வழக்குத் தீர்ப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ருவன் குணசேகர எதிர் ரவி கருணாநாயக்க, மொஹம்மட் சியாம் எதிர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, அனுரத்த ரத்வத்த எதிர் சட்ட மா அதிபர், திலங்க சுமதிபால எதிர் பொலிஸ் மா அதிபர், தட்சாயிணி எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்குகளின் வழக்குத் தீர்ப்புகள் சந்தேக நபருக்கு பிணை வழங்க ஆதரவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனினும் அவற்றை இவ்வழக்கில் சந்தேக நபருக்கு சாதகமான விடயங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.
எவ்வாறாயினும், இந்த பிணைக் கோரிக்கையானது பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 8 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் ஆராயப்படுகின்றது. அசாதாரணமான அல்லது விஷேட நிலைமைகள் தொடர்பில் இங்கு ஆராயப்படுகின்றது. விஷேட விடயங்கள் அல்லது நிலைமைகள் என்ற பதத்துக்கு வரைவிலக்கணம் பிரேமரத்ன எதிர் சட்ட மா அதிபர் வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு அமைய விஷேட விடயங்கள் மாறுபடலாம்.
இந் நிலையில் ஏற்கனவே சந்தேக நபரால் முன்வைக்கப்பட்ட முதல் பிணை கோரிக்கையில் தனது முதலாவது பிள்ளை சரும நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
அது குறித்த வைத்தியர்களின் அறிக்கையில் அப்பிள்ளைக்கு தாயின் அரவணைப்பு போதுமானது என சுட்டிக்காட்டப்பட்டதால் அப்போது அதனை இம்மன்று விஷேட நிலைமையாக ஏற்றுக்கொள்ள மறுத்தது.
எனினும் தற்போது செய்துள்ள பிணை கோரிக்கையில் 6 வயதான சந்தேக நபரின் பிள்ளை சுவாச கோளாறினால் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் இப்பிள்ளையின் அருகே தாயும் தந்தையும் இருக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது. குறித்த பிள்ளை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சிகிச்சை பெற்றுள்ளது.
சிறுவர் தொடர்பிலான விஷேட வைத்திய நிபுணர் அஜித்தின் அறிக்கையின் பிரகாரம், குறித்த பிள்ளை தந்தை அருகில் இல்லாமை காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலைமை தொடருமானால் பிள்ளை பலவீனமடையும் எனவும் மானசீக தாக்கம் அதிகரிக்கும் எனவும் அதில் கூறப்பட்டு அவர் ஊடாகவே மேலதிக சோதனைகளுக்காக குழந்தைகள் மன நல விஷேட வைத்திய நிபுணர் ஹேமபால பெரேராவின் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. அவரது அறிக்கையும் மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில் குறித்த பிள்ளை இளகிய மனதினைக் கொண்டது எனவும் மன ரீதியாக பாதிப்படையும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிள்ளைக்கு வயது ஆறரை வருடங்களே ஆகும் நிலையில் எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியாது என மன்றுக்கு விளங்குகின்றது. எனவே அம்மா, அப்பா இருவரும் அப்பிள்ளை அருகில் இருக்க வேண்டும் என கருதும் இந்த மன்று அதனை விஷேட காரணியாகக் கருதி சந்தேக நபருக்கு பிணை வழங்குகின்றது.
அதன்படி 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் செல்ல சந்தேக நபருக்கு மன்று அனுமதிக்கின்றது. அத்துடன் அவரது கடவுச்சீட்டு மன்றில் ஒப்படைக்கப்படுவதும் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்படுகின்றது. சந்தேக நபர் தனது நிரந்தர வதிவிடத்தை ஒரு வாரத்துக்குள் கிராம சேவகரின் உறுதியுடன் இம்மன்றுக்கு இடையீட்டு மனுவூடாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.
இதனையடுத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்னாண்டோ மேலதிக விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தார்.
கனம் நீதிவான் அவர்களே, இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை.' என்றார். இதன்போது குறுக்கிட்ட நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த விவகாரத்தில் வேறு யாரையேனும் கைதுசெய்ய உள்ளதா என வினவினார். இதற்கு பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ, ' ஆம் நீதிவான் அவர்களே, 6 பேர் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி தற்சமயம் விசாரணை நடத்துகின்றோம்.
சந்தேக நபரின் சாரதியிடமும் நாம் வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அத்துடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் போலியானதா உண்மையானதா என்பதைக் கண்டறிய அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பியுள்ளோம்.
சந்தேக நபருக்கு வாகனங்களை வழங்கிய விவகாரத்துடன் தொடர்புடைய ஜனாதிபதி செயலகத்தின் 6 பேர் குறித்தும் விசாரணை நடத்துகின்றோம்' என்றார்.
இதனையடுத்து வழக்கை நீதிவான் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Comments
Post a Comment