இனவாதிகளுக்கு கட்சியில் இடமில்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனவாதம் பேசுவோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசை மாற்றுவதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் படி அரசு கலைக்கப்பட்டு அதிகாரமானது நான்கரை வருடங்கள் கழித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனவே மிகவும் விரைவாக அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் சிலர் பேசுவதற்கு காரணம் அவர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் போதிய தெளிவின்மையே என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments