மைத்திரிக்கு மஹிந்த ஆதரவாளர்கள் பகிரங்க சவால்!
இலங்கையின் மக்கள் சக்தி – மஹிந்தவுடன் முன்நோக்கி” எனும் கருத்தை முன்வைத்து, சுதந்திரக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கு இவர்கள் கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தற்போது அவரை பின்தள்ளி விட்டு பதவிகளுக்காக நன்றி மறந்து மைத்திரி பக்கம் செல்கின்றார்கள்.
அவர்களுக்கு சரியான பாடத்தினை புகட்டுவோம் சுதந்திரக்கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியின் காட்சிப்பொருளாக மாறிவிட்டதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது .
அதே போன்று சுதந்திரக் கட்சி தற்போது செல்லும் பாதை எமக்கு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் காட்சிப்பொருளாக மாறுவதனை தடுக்கவேண்டும்.
கட்சிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு சரியான பாடத்தினை நாம் புகட்டுவோம். எவ்வாறான நிலை ஏற்பட்டாலும் நாம் சக்தி மிக்கவர்களே அதனால் எம்மை எதிர்க்க எவரும் முற்பட வேண்டாம்.
இதனை பகிரங்கமாகவே கூறி எச்சரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் சுதந்திரக் கட்சியின் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றிணைவோம் எனவும் சுதந்திரக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment