ஐ.தே.க –  ஸ்ரீ. சு.க ஆதரவாளர்களுக்கிடையே மோதல்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதி புனரமைப்பு நடவடிக்கைக்காக கட்டான பகுதிக்குச் சென்றிருந்த ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர் ரோசி பெர்ணான்டோவின் ஆதரவாளர்களும் ஸ்ரீ.சு.கவின் கட்டான தொகுதி அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளேயின் ஆதரவாளர்களுமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் மரணமொன்று நிகழ்ந்திருந்தமையால் வீதி புனரமைப்பு பணிகளை பிற்போடுமாறு சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேயின் ஆதரவாளர்கள் கோரியதாகவும் இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments