சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து!

காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் குறித்த சட்டமூலம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments