கட்டாரில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம்!
அதிக சம்பளத்துடன் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகம்இந்த தகவலை அறிவித்துள்ளது.
இணையத்தளங்களூடான விளம்பரங்களை நம்பி இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வருபவர்களில் பலர் வேலையற்று காணப்படுவதாகவும் அத்தூதரகம் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment