மஹிந்த அணியினர் மீதான களையெடுப்பு ஆரம்பம்: இறுதியறிக்கை மைத்திரியிடம்
கட்சியின் தலைமை மற்றும் கட்சியை விமர்சித்தமை தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் சிலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் பல இடங்களில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளை பயன்படுத்தி இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கட்சியை விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து இது குறித்து கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
விசாரணைகளின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதுடன் ஜனாதிபதி பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பார் என கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஸ தரப்பினரை களையெடுக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

Comments
Post a Comment