எச்சரிக்கை: வேகமாக பரவி வரும் மலேரியா காய்ச்சல்!!
மும்பையில் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக பலரும் வைத்தியசாலைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலேரியா காய்ச்சலுக்கு மட்டும் 583 பேர் பாதிக்கப்பட்டு மாநகராட்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக மஞ்சள் காமாலை நோயால் 135 பேரும், எலிக்காய்ச்சலுக்கு 76 பேரும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
நகரில் 63 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து மாநகராட்சி மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தண்ணீரினாலேயே இந்த நோய்கள் பரவுகின்றன.
எனவே பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்.
தேங்கி நிற்கும் மழை நீரில் மிதிக்க கூட விடக்கூடாது. சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாவதை தடுக்க முடியும். காய்ச்சல் ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்” என்றார்.

Comments
Post a Comment