இஸ்லாமிய மார்க்கப் போதகர் மீது அமெரிக்காவில் துப்பாக்கிசூடு !

வங்க தேசத்தை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க போதகர் ஒருவரும் அவரது உதவியாளரும் அமெரிக்கவின் குயிண்ஸ் புரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் வங்கதேச சமூகத்தில் மிக பிரபல மார்க்க போதகராக விளங்கிய இமாம் மவ்லானா அகோன்ஜி என்ற மார்க்க போதகர் பட்டப்பகலில் இனந்தெரியாத  துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மார்க்க போதகரின் உதவியாளரும் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments