பாலியல் குற்றங்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களும்

இன்று உலகளாவிய ரீதியில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மாபெரும் சவாலாக மாறியிருப்பது பாலியல் குற்றங்களாகும் . இந்தக் குற்றச் செயலானது சிறுவர் தொடங்கி பெரியோர் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஒன்றாக இன்று மாறியிருக்கின்றது .

இந்நிலைமையானது எமது நாடான இலங்கையையும் விட்டு வைத்து விடவில்லை தற்போதெல்லாம் நாட்டில் எங்காவது ஒரு நாளைக்கு பாலியல் குற்றம் தொடர்பான செய்தியை கேட்காமலிருக்க முடிவதில்லை . சில செய்திகள் சாதாரண மனிதனால் சிந்தித்தே பார்க்க முடியாதளவுக்கு காணப்படுகின்றன

இத்தகைய குற்றங்கள் அடுக்கடுக்காக அரங்கேறிக் கொண்டிருந்தும் அவற்றைக் குறைத்தல் மற்றும் தடுத்து நிறுத்தல் தொடர்பான ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்கள் எதுவும் இன்னும் இலங்கையில் முன்னெடுக்கப்படாமலிருப்பது வேதனையளிப்பதோடு எதிர்காலம் குறித்த அச்சத்தினையும் அதிகப்படியாக உண்டுபண்ணுகிறது .

குற்றச் செயல்களிலிருந்து வழிப்படுத்தக் கூடிய மனிதனுக்கு நேர்வழி காட்டக் கூடிய பாடசாலைகள் மற்றும் சமயத்தளங்கள் என்பவைகளில் கூட இத்தகைய குற்றங்கள் அரங்கேறும் செய்திகள் சாதாரணமாக இன்று காற்றோடு கலந்து விடுகின்றன இந்த நிலைமை ஒட்டு மொத்த மானுட அமைதிக்கும் பாரிய அச்சுறுத்தல் என்றே கருத வேண்டியிருக்கிறது எடுத்துக் காட்டாக வடக்கிலேயாழ்பாண வித்தியா பள்ளிக்கூட மாணவி பாலியல் வல்லுரவுக் கொலை மேற்கிலே சேயா பாலியல் பலாத்கார கொலை இப்படிப்பட்ட பல பாலியல் குற்றங்களை பட்டியலிட முடியும் இதற்கான அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் இந்ந நல்லாட்சி அரசாங்கத்தில்

இன்று பாடசாலைகளில் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் மேற்கொள்ளப்படுவதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகின்றன .
இத்தகைய குற்றங்களை களைவதற்கான வழிகாட்டல் அரங்கேற வேண்டிய தளத்திலேயே அவை இடம்பெருமானால் எதிர் கால சந்ததிகளின் நிலை என்னாவது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவசியம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் இத்தகைய மிலேசத்தனங்கள் குறித்து வேண்டுமென்றே மூடி மறைக்கப்படுவதோடு அவை பாரிய குற்றம் அல்ல எனச் சமூகத்தில் உள்ளவர்களால் பராமுகமாக விடப்பட்டும் விடுகின்றன இத்தகைய நிலைமைகள் தான் இக்குற்றச் செயல்கள் மென்மேலும் பெருக வாய்ப்பாய் அமைந்து விடுகின்றன ..

சில பெற்றோர்கள் இத்தகைய நிகழ்வுகள் குறித்து பிள்ளைகள் தெரியப்படுத்தும் தருனங்களில் அதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் மேற்கொண்டால் அது தம் பிள்ளையின் கல்வியில் தாக்கம் செலுத்தும் என்கின்ற அசட்டுத்தனமான அச்சத்துடன் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர் ஆனால் இதன் விளைவு பாரியளவிலான விபரீதத்தினை எதிர்காலத்தில் ஏற்படுத்தவல்லது என்பதனை அவர்கள் சிந்திக்கத் தவறுவதே இதற்கான காரணமாகும் .

எனவே இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டிப்பதற்கும் அவற்றிலிருந்து சமூகத்தை காப்பதற்கும் நாட்டின் ஒவ்வொரு பிரஜை தொடங்கி அரசாங்கம் வரையில் ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தாக வேண்டும்

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதோடு நவீன ஊடகப் பிரயோகம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது இனியும் பராமுகமாக இருந்து காமக் கயவர்களின் இச்சைகளுக்கு எமது பிஞ்சுகளைப் பழி கொடுப்பதிலிருந்தும் இத்தகைய விடயங்களைத் துாண்டும் காரணிகளிலிருந்தும் காக்கவல்ல விடயங்கள் குறித்து சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும் .

கிண்ணியா பிரதேச செயலகத்தில்31 கிராம சேவகர் பிரிவில் பல்வேறு சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடந்தேறியுள்ளது இதில் கூடுதலாக தாய் வெளிநாடு செல்லுதல் மூலமாக பல்வேறு முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன இதில் சில முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தொலைபேசி இலக்கமான1929 க்கும் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

அநேகமான துஷ்பிரயோகங்களாக பாலியல் துஷ்பிரயோகம் புறக்கணிப்பு அரசியல் வன்முறை போன்றன இது வரை உள்ள கால கட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம் .

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வழக்குகள்- சிறுவர் துஷ்பிரயோகங்கள் ……
வழக்கின் தன்மை ஆண்டு

பாலியல் துஷ்பிரயோகம் 2013
புறக்கணிப்பு 2013
பாலியல் துஷ்பிரயோகம் 2014
பாலியல் துஷ்பிரயோகம் 2014
பாலியல் துஷ்பிரயோகம் 2014
பாலியல் துஷ்பிரயோகம் 2015
பாலியல் துஷ்பிரயோகம் 2015
பாலியல் துஷ்பிரயோகம் 2015
பாலியல் துஷ்பிரயோகம் 2015
பாலியல் துஷ்பிரயோகம் 2015

திருட்டு 2015
திருட்டு 2015
திருட்டு 2015
திருட்டு 2015
திருட்டு 2015
திருட்டு 2015

அரசியல் வன்முறை 2015
வன்முறை 2015
வீதிப்போக்குவரத்து 2015
மூலம்:கிண்ணியா பிரதேச செயலகம்
பெரும்பாலான துஷ்பிரயோகங்கள் கிராமப் புறங்களிலேயே இடம் பெறுகின்றது இது தொடர்பாக பல கிராம மட்ட சிறுவர் சங்கங்கள் இதன் ஊடாக பயனடைய வேண்டுமானால் சிறு வயதில் பிள்ளைகளை விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் கிராம மட்டத்தில் விழிப்புணர்வுகள் அதிகம் இது தொடர்பாக வழங்கப்படல் வேண்டும்.

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இருக்குமானால் தாய் வெளிநாடு செல்ல முடியாது என்ற சட்டம் காணப்பட்டாலும் கூட அதையும் மீறி குறித்த உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்காமல் சட்டரீதியற்ற ஆவணங்களை தயாரித்து தாய்மார்கள் வெளிநாடு செல்கின்றார்கள் இதன் விளைவாக பிள்ளைக்கு தாய் பாசம் பாதுகாப்பு அற்று துஷ்பிரயோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது .

துஷ்பிரயோகங்கள் உடல் உளரீதியான பாதிப்புக்களை சிறுவர்களுக்கு ஏற்படுத்துகின்றது இதனால் கல்வியில் பல பின்னடைவுகளை எதிர்நோக்குகின்றனர்கள் உளரீதியாக மனநிலை மூளையின் தாக்கத்தை உண்டுபண்னி உளவளத்துனைக்கு உட்படுகின்ற பாரிய நிலை ஏற்படுகிறது .

வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அனைத்தும் துஷ்பிரயோகமாக வரையரை செய்யப்பட்டுள்ளது 14 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என சிறுவர் சமவாயம் கூறுகின்றது துஷ்பிரயோகத்துக்கு உட்பட்ட பிள்ளையின் பாதிப்பு அதிகமாக உள்ளது கற்பழிப்பின் பிற்பாடு கொலை செய்து விடுகின்றனர் இவ்வாறான குற்றவாளிகளுக்கு நாட்டின் நீதிமன்றம் நிபந்தனையற்ற தண்டனை வழங்க வேண்டும் தீர்ப்பில் தாமதம் ஏற்படுத்துவது பாலியல் குற்றங்களை அதிகரிக்க செய்கின்றது .

Comments