ஷாக்கீர் நாயக் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானவையாம் -முஸ்லிம் மத்திய மந்திரி

புதுடெல்லி

ஷாக்கீர் நாயக் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானவை என்று மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறிஉள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். மும்பையை சேர்ந்த மத போதகர் ஷாக்கீர் நாயக்கின் சொற்பொழிவை கேட்டு தான், அவர் தீவிரவாதியாக மாறியதாக வங்கதேச அரசு கூறியது. இதைத்தொடர்ந்து, ஷாக்கீர் நாயக்கின் நடவடிக்கைகளை மும்பை போலீசார் மட்டுமின்றி, மத்திய அரசின் விசாரணை முகமைகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்களும் ஆராயப்பட்டு வருகின்றன.

ஜாகிர் நாயக் விவகாரத்தில் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மாநில உள்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததாக ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “ஷாக்கீர் நாயக் தொடர்பான விசாரணை அறிக்கையை மும்பை காவல் துறையிடம் இருந்து மராட்டிய அரசு பெற்று உள்ளது. அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்று உள்ளது. ஷாக்கீர் நாயக் தலைமையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிலவற்றில் அவருடைய பங்கும் உள்ளது.

மராட்டிய அரசு அறிக்கையை ஆய்வு செய்து வருகிறது, அறிக்கையானது விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம்,” என்றார்.

ஷாக்கீர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இருந்து ரூ. 60 கோடி அனுப்பப்பட்டுள்ளது என்றும் மும்பை போலீஸ் கூறிஉள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாக்கீர் நாயக்கின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ‘இஸ்லாமிக் ரிசர்வ் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் அவர் நடத்திவரும் என்ஜிஓ அமைப்பின் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஷாக்கீர் நாயக் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானவை என்று மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறிஉள்ளார்.டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, ”ஷாக்கீர் நாயக் பற்றி பல்வேறு விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. நாயக்கின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதத்திலும், சர்ச்சைக்குரிய வகையிலும் உள்ளன. அவரின் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிராக உள்ளன. பாதுகாப்பு முகமைகள் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்திவருகின்றன. அவரின் மர்மமான செயல்பாடுகள் குறித்த உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்” என்றா

Comments